வலிமை படத்தில அஜித்துக்கு இந்த வாட்டி ப்ரோமோஷன் – ஹெச் வினோத் செய்த மாற்றம்!

செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (17:22 IST)
வலிமை படத்தில் அஜித் சேஸிங் காட்சிகளின் போது பஸ் எல்லாம் ஓட்டுவது போல காட்சிகளை எடுத்துள்ளாராம் ஹெச் வினோத்.

இயக்குனர் ஹெச் வினோத் அஜித்தை வைத்து தொடர்ச்சியாக அவரது இரண்டாவது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு வலிமை என பெயர் வைக்கப்பட்டு 60 சதவீத படப்பிடிப்பு வரை முடிந்துள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக இப்போது படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லாக்டவுனுக்கு முன்பாக அஜித் நடிக்கும் பல காட்சிகளை படமாக்கியுள்ளார் வினோத். அதில் வங்கி ஒன்றை கொள்ளையடிக்கும் நபர்களை அஜித் துரத்தி செல்வது போல காட்சிகளைப் படமாக்கியுள்ளாராம். வழக்கமாக அஜித் படங்களில் பைக் சேஸிங் மற்றும் கார் சேஸிங் காட்சிகள் மிகவும் பிரமாதமாக படமாக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் இம்முறை கார் மற்றும் பைக்குக்கு பதிலாக அஜித் பஸ் ஒன்றை ஓட்டி செல்வது போல படமாக்கியுள்ளாராம் வினோத். இந்த காட்சிகள் புல்லரிக்கும் விதமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்