பைக்கில் இந்தியாவை சுற்றும் தல அஜித் – இணையத்தில் வெளியான புகைப்படம்!

புதன், 20 ஜனவரி 2021 (18:15 IST)
நடிகர் அஜித் இப்போது வடகிழக்கு மாநிலங்களில் பைக் ரைட் சென்றுள்ளார்.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தென் ஆப்பிரிக்கா செல்ல உள்ளது படக்குழு.

இந்நிலையில் அதற்கு முன்னதாக அஜித் பைக்கில் இந்தியா முழுவதும் ஒரு பயணம் செல்ல விரும்பி இப்போது வடகிழக்கு மாநிலங்களில் சுற்றி வருகிறார். அங்கே அவரை அடையாளம் காணும் ஒரு சிலர் அவருடன் செல்பி எடுத்து இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று அஜித் தலைக்கு டை அடித்து இளமையான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்