இதோ வந்துடாய்ங்கல... டிரெண்டாகும் #அஜித்தைபின்தொடரும்விஜய்!!

புதன், 22 ஏப்ரல் 2020 (16:36 IST)
#அஜித்தைபின்தொடரும்விஜய் என்ற ஹேஷ்டேக் அஜித் ரசிகர்களால் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 
 
நாடு முழுவதும் கொரோனா வைரஸால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் மக்களுக்கு உதவுவதற்காக பல்வேறு அரசியல் மற்றும் திரை பிரபலங்களும் நிதியுதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் கொரோனா நிதியுதவியாக ரூ.1.30 கோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.
 
பிரதமரின் நிவாரண நிதி கணக்கிற்கும், 6 மாநிலங்களுக்கும் நடிகர் விஜய் நிதியளித்தது குறித்து அவரது ரசிகர்கள் ட்விட்டரில் #RealHeroThalapathyVIJAY என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இதற்கு போட்டியாக #அஜித்தைபின்தொடரும்விஜய் என்ற ஹேஷ்டேக் அஜித் ரசிகர்களால் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 
 
முதலில் நடிகர் அஜித் தான் ரூ.1.25 கோடி நிதியுதவி அளித்தார். தற்போது விஜய் அளித்துள்ளார். இதனால் இந்த ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்