தமிழ் சினிமாவின் இரண்டு வசூல் நாயகர்கள் என்று விஜய், அஜித்தை கூறினால் அது மிகையாகாது. இவர்களுடன் ஒரே ஒரு படத்தில் நடிக்க தவமிருக்கும் நட்சத்திரங்கள் ஏராளம். இந்நிலையில் இருவர் படங்களுக்கும் நடனப்பயிற்சி அமைத்து டான்ஸ் ஆடிய நடன இயக்குனர் மாஸ்டர் ஜானி தல, தளபதி பழகும் விதம் குறித்து கூறியுள்ளார்.
‘விஜய் சார் நல்லா பழகுவார். ஆனால் ரொம்ப நெருங்க மாட்டார். அஜீத் சார் சொல்லவே தேவையில்லை, அவர் ‘தல’. மிகவும் நெருங்கி பழகுவார் அதுமட்டுமின்றி உரிமையோடும் பழகுவார். எங்கு பார்த்தாலும் நம்மை அடையாளம் கண்டு நட்புடன் பேசுவார், அதனால தல தல தான் என்று கூறியுள்ளார்