உலக அளவில் டிரெண்ட் ஆகிய 'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட்லுக்

வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (07:26 IST)
அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் 'விஸ்வாசம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று அதிகாலை 3.40 மணிக்கு வெளியாகவுள்ள செய்தியை நேற்றிரவே பார்த்தோம். அந்த வகையில் மிகச்சரியாக திட்டமிட்ட நேரத்தில் சமூக வலைத்தளங்களில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது.
 
'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட்லுக் வெளியான ஒரு சில நிமிடத்தில் தமிழக அளவிலும் அதன் பின்னர் இந்திய அளவிலும் சிறிது நேரத்திற்கு முன்னர் உலக அளவிலும் டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது. அஜித் ரசிகர்கள் தொடர்ந்து இந்த படத்தை குறித்து டுவீட்டுக்களை பதிவு செய்து கொண்டே இருப்பபதால் டிரெண்ட் தொடர்ந்து வருகிறது.
 
மேலும் இந்த படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் என்ற கூறப்பட்ட நிலையில் இந்த ஃபர்ஸ்ட்லுக்கும், 'ரெட்டைத்தல' என்பதை உறுதி செய்துள்ளது. மேலும் தந்தை மகன் என இரண்டு அட்டகாசமான லுக், அஜித் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்துள்ளது. மேலும் இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் பொங்கல் வெளியீடு என்பதையும் படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். எனவே வரும் பொங்கல் தினத்தில் அஜித் ரசிகர்களுக்கு ஒரு அட்டகாசமான விருந்து காத்திருக்கின்றது என்றால் அது மிகையில்லை

We are excited to present to you #ViswasamFirstLook #Pongal2019 @directorsiva @SureshChandraa @immancomposer @AntonyLRuben @vetrivisuals @Actor_Vivek @DoneChannel1 pic.twitter.com/ez1cLQ7dnL

— Sathya Jyothi Films (@SathyaJyothi_) August 22, 2018

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்