’வலிமை’ படத்தின் இண்டர்வெல் காட்சி இதுதான்: வைரல் புகைப்படம்!

வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (18:45 IST)
’வலிமை’ படத்தின் இண்டர்வெல் காட்சி இதுதான்: வைரல் புகைப்படம்!
தல அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தின் வீடியோ நேற்று வெளியான நிலையில் இன்று அந்த படத்தின் இண்டர்வெல் காட்சியின் ஸ்டில் ஒன்று இணையதளங்களில் கசிந்துள்ளது
 
’வலிமை’ படத்தின் இன்டர்வெல் பிளாக் இதுதான் என்று கூறப்படும் அந்த ஸ்டில்லில் லாரிக்கு முன்னே செல்ல பைக்குகள் செல்வது போன்ற காட்சி உள்ளது. பேக்கிரவுண்டில் மஞ்சள் நிற புகையுடன் இருப்பது போன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த காட்சியை கடந்த ஆண்டு அதாவது கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முன்னர் சென்னை எண்ணூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் படமாக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் எப்படி கசிந்தது என்று தெரியாமல் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்