அஜித் அழைத்தும் வராத இயக்குனர்…. அதனால் அவருக்கு வாய்ப்பே இல்லை!

செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (15:50 IST)
நடிகர் அஜித் தன்னுடைய படத்தை இயக்க அழைத்தும் இயக்குனர் விஜய் வரமுடியாத சூழலால் சிக்கிக் கொண்டு இருந்தாராம்.

இயக்குனர் விஜய்யை தனது கிரீடம் படத்தின் மூலமாக அஜித் அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை எல்லாம் இயக்கி உச்சத்துக்கு சென்றார். ஆனால் அவரின் எந்த படங்களும் மிகச்சிறப்பான வெற்றி பெற்றதில்லை. அல்லது வேறு ஏதாவது ஒரு படத்தின் காப்பி என சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு அஜித் விஜயா புரொடக்‌ஷனுக்காக ஒரு படத்தில் நடிக்க சம்மதித்தார். அப்போது அந்த படத்தையே இயக்கும் வாய்ப்பை அஜித் விஜய்க்குதான் கொடுக்க எண்ணியிருந்தாராம். ஆனால் அப்போது தாண்டவம் படத்தை இயக்க வேண்டி இருந்ததால் தன்னால் இயக்க முடியாது எனக் கூறி நிராகரித்துவிட்டாராம். அதனால் அஜித் அவர் மேல் வருத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதனால் அவர் ஏ எல் விஜய்யுடன் இணைவதற்கான வாய்ப்பே இல்லை என சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்