யூடியூப் சேனல்கள் மீது ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா வழக்கு.. என்ன காரணம்?

வியாழன், 20 ஏப்ரல் 2023 (13:15 IST)
ஒரு சில யூடியூப் சேனல்கள் தனது உடல்நிலை குறித்து தவறான தகவலை தெரிவித்து வருவதாக நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன

இது குறித்து ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தனது உடல் நலம் குறித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் உண்மைக்கு மாறான வீடியோக்களை யூடியூபில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா தாக்கல் செய்த வழக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்