2012ஆம் ஆண்டு வெளியான ‘வேட்டை’ படம்தான், மாதவன் நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ்ப் படம். அதன்பின் பாலிவுட்டில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்த மாதவனை, தமிழுக்கு கொண்டு வந்தார் சுதா கொங்கரா. அந்தப் படத்தின் மூலம் புதிதாக ஏகப்பட்ட ரசிகர்களைப் பெற்றார் மாதவன்.
தற்போது, ‘விக்ரம் வேதா’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் மாதவன். அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வெங்கடேஷை வைத்து ‘இறுதிச்சுற்று’ படத்தை ரீமேக் செய்த சுதா, அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார். பிரபல நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முதல் படம் ஹிட்டானதால், மாதவனே இந்தப் படத்திலும் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.