47 நாட்களுக்குப் பிறகு முதன்முதலில் வெளியாகும் படம் எது எனத் தெரியுமா?

வியாழன், 19 ஏப்ரல் 2018 (11:10 IST)
திரைத்துறையின் 47 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு முதன்முதலில் வெளியாகும் படம் எது எனத் தெரியவந்துள்ளது. 
திரைத்துறையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்காக கடந்த 47 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது தயாரிப்பாளர்கள் சங்கம். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நாளை முதல் படங்கள் ரிலீஸாக உள்ளன.
இதில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘மெர்க்குரி’ படம் முதன்முதலில் ரிலீஸாக இருக்கிறது. பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படம், சைலண்ட் த்ரில்லராக உருவாகியுள்ளது. ‘மேயாத மான்’ இந்துஜா, தீபக் பரமேஷ், ஷனந்த் ரெட்டி, ஷஷாங்க் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
மற்ற மொழிகளில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான இந்தப் படம், தமிழில் நாளை ரிலீஸாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்