இயக்குனர் ஹலிதா ஷமீம் பூவரசம் பீப்பி மற்றும் சில்லுக் கருப்பட்டி ஆகிய படங்களுக்கு பிறகு இப்போது சமுத்திரக்கனி மற்றும் நடிகர் மணிகண்டன் ஆகியோர் இயக்கத்தில் ஏலே என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தந்தை மகன் பிணைப்பைப் பற்றிய படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஆடியோ ரிலீஸாகி கவனம் பெற்றது.
இந்த திரைப்படம் பிப்ரவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. 17 நாட்கள் இடைவெளியில் ஓடிடி தளத்திலும் வெளியாக இருந்தது. ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் விதித்துள்ள புதிய விதியின் திரையரங்கில் வெளியாகி 30 நாட்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியாகவேண்டும். அதனால் பிப்ரவரி 28 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியானது.