ஜூலை மாதம் யாஷிகா தனது நண்பர்களுடன் பயணித்துக்கொண்டிருந்தபோது , விபத்தில் சிக்கிப் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் இவரது தோழி சம்பவம் இடத்திலேயே பலியானார். இந்நிலையில் இன்று மருத்துவமனை சென்று யாஷிகாவை பார்த்த நடிகர் அசோக், அவருடம் புகைப்படம் எடுத்துக் கொண்டார். யாஷிகா குணமடைய இன்னும் 5 மாதங்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.