உங்களுக்கு போயி Chance கொடுக்கமாட்றாங்களே - வேதிகாவை நினைச்சி வேதனை படும் ரசிகர்கள்!

வியாழன், 20 ஏப்ரல் 2023 (19:14 IST)
நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘மதராசி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகானவர் நடிகை வேதிகா. இவர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘முனி’ படத்தில் நடித்து ஏகோபித்த புகழை சம்பாதித்தார்.
 
இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் இவருக்கு பல வாய்ப்புகள் வந்தது. அதையடுத்து "காளை", ‘சக்கரகட்டி’, ‘பரதேசி’ போன்ற படங்கள் நடித்து புகழ்பெற்றார். அதையடுத்து இந்திக்கு அங்கு நட்சத்திர நடிகர் இம்ரான் ஹாஷ்மிக்கு ஜோடியா நடித்து பெயர் வாங்கினார்.
 
இருந்தும் வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காததால் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக இருந்து ரசிகர்கள் தன்னை மறக்காமல் இருக்க பார்த்துக்கொள்கிறார். இந்நிலையில் தற்போது ஸ்லிம் பிட் லுக்கில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு  லைக்ஸ் அள்ளியுள்ளார். இவ்ளோவ் ஹாட் அழகா இருக்கிற உங்களுக்கே வாய்ப்பு கிடைக்கமாட்டேங்குதே என நெட்டிசன்ஸ் வேதனை அடைந்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்