பொதுவாக மது அருந்தும் பழக்கம் பல நடிகைகளுக்கு உண்டு. ஷூட்டிங் முடித்தவுடன் நட்சத்திர ஒட்டல், நண்பர்கள் வீடுகள் என சென்று பார்ட்டியில் ஜாலியாக இருப்பார்கள். ஆனால், அவர்கள் மது அருந்தும் புகைப்படம் எதுவும் வெளியே வராமல் பார்த்துக் கொள்வார்கள். ஆனால், அதை ஒரு நடிகை உடைத்துள்ளார்.
டார்லின், கத்துக்குட்டி, நவரச திலகம் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை சிருஷ்டி டாங்கே. இவர், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து வெளிவரவுள்ள தர்மதுரை படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்துள்ளார்.
ஆனால், விழாவுக்கு செல்லும் முன்பாகவே, பார்ட்டிக்கு சென்ற சிருஷ்டி டாங்கே ஜாலியாக ஒயின் பாட்டிலை ஓப்பன் செய்து அருந்தியுள்ளார். இதை ஒருவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டுவிட்டார்.