திடீரென மெமரி லாஸ் ஆன அரவிந்தசாமி! காப்பாற்றிய பிரபல நடிகை

திங்கள், 19 ஜூன் 2017 (23:20 IST)
'தனி ஒருவன்', 'போகன்' வெற்றி படங்களுக்கு பின்னர் அரவிந்தசாமி நடித்து வரும் படங்களில் ஒன்று 'வணங்காமுடி'. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்றைய அரவிந்தசாமியின் பிறந்த நாளை ஒட்டி வெளியாகியது.



 


அரவிந்தசாமி நடித்த 'புதையல்' படத்தை இயக்கிய செல்வா, மீண்டும் அரவிந்தசாமியுடன் இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளார். இந்த படத்தில் அரவிந்தசாமி நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றார்,

முதல் பாதியில் சமூக விரோதிகளை அடித்து நொறுக்கும் கேரக்டரில் நடிக்கும் அரவிந்த்சாமி, இரண்டாவது பாதியில் வில்லன் குரூப்களல் தாக்கப்பட்டு மெமரி லாஸ் ஆகி விடுவாராம். இதனல் அவரை கொல்ல வருபவர்களையே அவருக்கு அடையாளம் தெரியாத நிலை ஏற்படுகிறது.

இந்த நிலையில் அவருடன் பணிபுரிந்த இன்னொரு நேர்மையான அதிகாரியான சிம்ரன், அரவிந்தசாமியை எதிரிகளிடமிருந்து காப்பாற்றி அவருக்கு மீண்டும் நினைவு திரும்ப வைத்து எதிரிகளை வதம் செய்வது தான் கதையாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்