பருத்தி வீரன் படத்தின் மூலம் தன்னை சிறந்த நடிகையாக நிலை நிறுத்திக் கொண்ட பிரியாமணி, தேசிய விருது வரை சென்றார். ஆனால் அதன் பிறகு அவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வராததால் கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி எனக் கிடைத்த வேடங்களில் நடித்தார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் தொடர் கவனம் பெற்றது. அதையடுத்து இப்போது அதன் சீசன் 2 வெளியாகி நல்ல கவனத்தைப் பெற்றது. இதையடுத்து அவரிடம் இப்போது 8க்கும் மேற்பட்ட படங்கள் கைவசம் இருக்கிறது. இந்நிலையில் உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மான தோற்றத்தில் தான் இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.