பிரபல நடிகை பூர்ணாவுக்கு குழந்தை பிறந்தது… குவியும் வாழ்த்துகள்!

புதன், 5 ஏப்ரல் 2023 (13:51 IST)
பிரபல மலையாள நடிகை பூர்ணா. இவரது உண்மையான பெயர் ஷாம்னா காசிம். இவர் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, காப்பான், ஸ்ரீமஹாலட்சுமி, அவுனு, சீமா டபகை மற்றும் அகண்டா போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்  ஆகிய மொழிகளில்  நடித்து வந்த நடிகை பூர்ணா, கடந்த அக்டோபர் மாதம்  ஜேபிஎஸ் குழும நிறுவனத்தில் தலைமை  நிர்வாக அதிகாரி ஷானித்தை திருமணம் செய்து கொண்டார்.

சில மாதங்களுக்கு முன்னர் இவர் கர்ப்பமாக இருப்பதாக யூடியூப் சேனல் ஒன்றில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இப்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது சம்மந்தமான புகைப்படத்தை அவர் பகிர, வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்