நடிகை ஓவியா '90 எம்.எல்.’ படத்தில் அரைகுறை உடை அணிந்து, இரட்டை அர்த்த வசனம் பேசி, ஆபாச காட்சியில் நடித்துள்ளார். இந்த படம் மார்ச் 1ம் தேதி (நாளை மறுநாள்) உலகம் முழுவதும் வெளியாகிறது.
அதற்கு பதிலளித்துப் பேசிய ஓவியா, எது ஆபாசம் என்று சொல்கிறீர்கள், பெண்கள் என்றாலே கண்ணை கசக்கிக்கொண்டு நடிக்க வேண்டும் என்று சட்டம் இருக்கா, நான் நிர்வாணமாக நடிக்கவில்லை. கற்பழிக்கும் காட்சியில் நடிக்கவில்லை. ரசிகர்கள் என்னிடம் எதை எதிர்பார்க்கிறார்களோ, அதை கொடுப்பது என் கடமை. உடை அணிவது பெண்களின் சுதந்திரம். அவரவர் விருப்பப்படி உடை அணிவதற்கு உரிமை இருக்கிறது. அதில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. இது, ஆணாதிக்கத்துக்கு எதிரான படம். கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் ஏற்ப நடிப்பதில் தப்பு இல்லை. படத்தில் நான் கவர்ச்சியாக நடித்து இருக்கிறேன். ஆபாசமாக நடிக்கவில்லை. காதலில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் கல்யாணத்தில், ‘அது’ இல்லை என்றார்.