நீச்சல் குளத்தில் முத்தம் கொடுத்த நயன்தாரா! செம்ம வைரலாகும் புகைப்படம்!

திங்கள், 17 ஜூன் 2019 (14:34 IST)
தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்துவிடுவார்கள். 
 
இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் அளப்பறைகளை பார்க்கும் சமூக வலைதளவாசிகள் சிங்கிள் பசங்க சாபம் உங்களை சும்மா விடாது என கடுப்பாகின்றனர். அந்த அளவிற்கு லூட்டியடிக்கும் இந்த ஜோடி புறாக்கள் திருமணத்தை பற்றி மூச்சு விடாமல் கமுக்கமாக இருக்கிறார்கள். ஆனால் ஊர்சுற்றும் நெருக்கமான புகைப்படங்கள் மட்டும் அவ்வப்போது வெளியாகி பலரையும் புகைய வைத்துவிடுகிறது. 
 
மேலும் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வசிப்பதாகவும் செய்தி வெளியாகி கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்டது. அடிக்கடி டேட்டிங் செல்லும் இவர்கள் தற்போது  காதல் ஜோடிகளின் முக்கிய சுற்றுலாத்தளமாக பார்க்கப்படும்  சாண்டோரினி நகரில் இருவரும் ஜோடியாக வலம் வருகின்றனர். இந்த நகரம் புதுத்தம்பதிகள் ஹனிமூன் செல்லும் முக்கிய நகரமாக இருந்து வருகிறது. 


 
சமீபத்தில் அங்கிருந்து நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்தவகையில் தற்போது நீச்சல் குளத்தில் இருந்துக்கொண்டு சூரியனை முத்தமிடுவது போல் ஒரு புகைப்படம் எடுத்துள்ளார் நயன். தற்போது அந்தப்புகைப்படம் இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்