நதியா நடிக்கும் திரைக்கு வராத கதை

செவ்வாய், 4 அக்டோபர் 2016 (19:47 IST)
நதியா நடிக்கும் புதிய படத்துக்கு, திரைக்கு வராத கதை என்று பெயர் வைத்துள்ளனர்.
 

 
இந்தப் படத்தை மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் படங்களை இயக்கிய துளசிதாஸ் என்பவர் இயக்குகிறார். இவர் தமிழுக்கு அறிமுகமாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.குமார் பாடல்களுக்கு இசையமைக்க ஆரோல் கொரோலி பின்னணி இசையமைக்கிறார்.
 
இப்படத்தில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இப்படத்தில் ஒரேயொரு காட்சியில் கூட ஆண்கள் நடிக்கவில்லை என்பதுதான்.
 
கதையின் போக்கில் ஏற்படும் சம்பவங்கள் உண்மை சம்பவங்களாக மாறுகிறது. இதன் பின்னணியில் திரில்லர் கதையோட்டத்துடன் சஸ்பென்ஸ், அதிரடி கலந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இம்மாதம் இறுதியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்