“என்ன ரொம்ப டார்ச்சர் பண்ணாங்க… வீடியோவ சீக்கிரம் ரிலீஸ் பண்றேன்” சர்தார் மேடையில் லைலா!

சனி, 15 அக்டோபர் 2022 (16:33 IST)
சர்தார் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை லைலா பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.

கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் சர்தார் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் புரமோஷன் பணியை கடந்த சில நாட்களாக படக்குழுவினர் விறுவிறுப்பாக செய்துவரும் நிலையில் நேற்று இந்த படத்தின் இரண்டு நிமிட ட்ரெய்லர் வெளியானது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார் பல வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நடிக்கும் லைலா. அப்போது “இந்தபடத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் என்னை அழைத்து வந்ததற்கு படக்குழுவினருக்கு நன்றி. என்னை இந்த படத்தின் போது டார்ச்சர் செய்த வீடியோ என்னிடம் இருக்கிறது. அதை நான் எடிட் செய்து வெளியிடுகிறேன்” என ஜாலியாக பேசியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்