மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சீதக்காதி படத்தை தொடர்ந்து தற்போது சீனுராமசாமி இயக்கத்தில் மாமனிதன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். வொய்.எஸ்.ஆர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் காயத்ரி ஹீரோயினாக நடிக்கிறார். படத்திற்கு இசைஞானி இளையராஜாவும், யுவுனும் சேர்ந்து இசையமைக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள செய்தி என்னவென்றால் , மாமனிதன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பழம்பெரும் நடிகை "கவளம் அச்சம்மா" உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் அவரை அருகில் இருந்த சங்கணச்சேரி தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை அறிந்த விஜய் சேதுபதி மருத்துவ செலவுக்கு தேவையான பணத்தை தந்து உதவியுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி அச்சம்மா காலமானார்.