விஜய் - அஜித் ரசிகர்களுக்கு சவுக்கடி அட்வைஸ் கொடுத்த கஸ்தூரி!

செவ்வாய், 30 ஜூலை 2019 (17:11 IST)
விஜய் அஜித் ரசிகர்களின் அட்டுழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த இருவரின் படங்ககள் ஒரே நேரத்தில் உருவாகினால் இன்னும் சொல்லவே தேவையில்லை. அடுத்தவர்களை மட்டம் தட்டுவதாக கூறி அவரவரின் தரத்தை தாழ்த்திக்கொள்கின்றனர். 


 
அப்படி தான் அஜித் - விஜய் ரசிகர்கள் நேற்றிரவு மிகவும் மோசமாக நடந்துகொண்டனர். அதாவது நேர்கொண்டப்பார்வை வருகிற ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாவதையொட்டி அதனை கிண்டலடிக்கும் விதமாக விஜய் ரசிகர்கள் #ஆகஸ்டு8_பாடைகட்டு என்பது மாதிரியான ஹேஸ்டாக்கை உருவாக்கி டிரெண்ட் செய்தனர். 
 
இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் #RIPActorvijay என்ற  ஹேஸ்டாக்கை  உருவாக்கி எல்லை மீறி சண்டையிட்டுக்கொண்டனர். இது சினிமா பரபலங்களையும் முகம் சுளிக்க வைத்தது. அந்தவகையில் தற்போது இது குறித்து ட்விட்டர் பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி கூறியுள்ளதாவது, "நெகடிவ் விஷயங்களுக்கு இவ்வளவு மெனக்கெடும்  தல அஜித் தளபதி விஜய்  ரசிகர்கள் அந்த நேரத்தையும் முயற்சியையும் நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தினால் ஊர் உங்களையும் வாழ்த்தும், உங்கள் அபிமான நட்சத்திரத்தையும் வாழ்த்தும்" என்று சரியான அட்வைஸ் கொடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்