இன்ஸ்டாக்ராமில் இணைந்த ஜோதிகா – 1 மணி நேரத்திற்கு 1 மில்லியனை தாண்டிய ஃபாலோவர்கள்!

செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (11:27 IST)
நடிகை ஜோதிகா இன்ஸ்டாக்ராமில் இணைந்துள்ள நிலையில் அவருக்கு ஃபாலோவர்கள் அதிகமாகி வருகின்றனர்.

தமிழ் நடிகை ஜோதிகா சமீப காலமாக பெண்கள் முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். எனினும் சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக அவர் இணையாமலே இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது இன்ஸ்டாக்ராமில் முதன்முறையாக கணக்கு தொடங்கியுள்ளார் ஜோதிகா.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் புகைப்படமாக இமாலய மலைத்தொடர் அருகே தேசிய கொடி வைத்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் 1 மணி நேரத்திற்குள்ளாக 1 மில்லியன் லைக்குகளை தாண்டியுள்ல அதேசமயம் ஜோதிகாவை ஃபாலோ செய்பவர் எண்ணிக்கையும் 1 மணி நேரத்திற்குள்ளாக 1 மில்லியனை தாண்டியுள்ளது.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jyotika (@jyotika)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்