ஜோதிலட்சுமி 1963 -இல் வெளிவந்த பெரிய இடத்து பெண் படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். அழகும் திறமையும் இருந்த அவருக்கு அதிகமும் கிடைத்தது அந்த கால கிளப் டான்ஸ் எனப்படும் கவர்ச்சி நடனங்கள் மட்டுமே. ஜோதிலட்சுமியின் கவர்ச்சி நடனத்துக்காகவே அன்று பலரும் திரையரங்குக்கு வந்தனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று நான்கு மொழிகளில் ஜோதிலட்சுமி கொடிகட்டிப் பறந்தார்.
அவரது சகோதரி ஜெயமாலினியின் வருகை ஜோதிலட்சுமியின் புகழை மங்கச் செய்தது. ஆனாலும், வயதான நிலையிலும் அவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். சினிமாவில் அவர் சம்பாதித்த இமேஜுக்கு முற்றிலும் வேறு திசையில் இருந்தது அவரது தொலைக்காட்சி நடிப்பு.