முதல்வரிசையில் அவரது மனைவி டுவிங்கிள் அமர்ந்து ரசித்துக்கொண்டிருந்தார். திடீரென்று மனைவி டுவிங்கள் முன்போய் நின்ற அக்ஷய் தனது பேன்ட் பட்டனை கழற்றும்படி கூறினார். ஒரு நிமிடம் ஷாக் ஆனவர் பிறகு விளம்பரத்துக்காக இப்படி செய்வதை புரிந்துகொண்டு பேன்ட் பட்டனை மேடையிலேயே கழற்றிவிட்டார். இந்த காட்சியை புகைப்படக்காரர்கள் படம் எடுத்து தள்ளினர்.
பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொண்டதாக டுவிங்கிள் மீது ஒருவர் போலீசில் புகார் செய்ததுடன் தன்னை டுவிங்கிள் அடித்ததாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து டுவிங்களை கைது செய்த போலீசார் 500 ரூபாய் ஜாமீனில் உடனடியாக விடுதலை செய்தனர். ஆனால் இதுதொடர்பான வழக்கு இன்னும் நடந்து வருகிறது. இந்த வழக்கால் பாதிப்பு வந்துவிடுமா என்ற பதற்றத்துடன் சக நண்பர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருதாக தகவல் வெளியாகி உள்ளது.