கார் விபத்தில் இளம் நடிகை மரணம்!

புதன், 22 செப்டம்பர் 2021 (11:21 IST)
மராத்திய நடிகையான ஈஸ்வரி தேஷ்பாண்டே கார் விபத்தில் சிக்கி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

கோவாவின் அர்போரா பகுதியில் தனது நண்பருடன் காரில் சென்றுள்ளார் ஈஷ்வரி தேஷ்பாண்டே.  நள்ளிரவு விருந்து ஒன்றுக்கு சென்று திரும்பிய நிலையில்(அவர்கள் கைகளில் அதற்கான பேண்ட்  இருந்துள்ளது) அதிகாலை நேரத்தில் நீர் பகுதிக்குள் கார் விழுந்து மூழ்கியுள்ளது.

அதில் ஈஷ்வரி தேஷ்பாண்டேவும், ஷூபம் என்பவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் மராத்தி திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்