ஆக்‌ஷன் ஹீரோயினாகும் அஞ்சலி: தற்காப்புக் கலையில் ஆர்வம்!

சனி, 27 பிப்ரவரி 2021 (09:37 IST)
மார்ஷல் ஆர்ட்ஸ் கற்பதில் தனது கவனத்தை திருப்பியுள்ளார் நாயகி அஞ்சலி.

தெலுங்கு மற்றும் தமிழில் பிசியாக நடித்து வரும் அஞ்சலி சமீபத்தில் பைக் ஓட்ட கற்றுக்கொண்டுள்ளார். அதோடு, இப்போது மார்ஷல் ஆர்ட்ஸ் கற்பதில் தனது கவனத்தை திருப்பியுள்ளார். 
 
இது பெண்களுக்கு அவசியமான தற்காப்புக் கலை. சினிமாவில் நடிப்பதால் இந்த கலையை கற்று இருப்பதால் ஆக்‌ஷன் வேடங்களில் நடிப்பதும் சுலபமாக இருக்கும். அதே நேரம், வீட்டில் சும்மா இருப்பதை விட இதுபோல் கலைகள் கற்றுக்கொள்வது நேரத்தை சரியாக செலவிட உதவியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார் அஞ்சலி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்