இந்த இரண்டு படங்களையும் தொடர்ந்து தற்போது மீண்டும் மூன்றாவது முறையாகவும் மணிரத்தினம் இயக்கத்தில் "நவாப்" என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்தது. மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் படு பிசியாக நடித்து வரும் அதிதிக்கு தற்போது 32 வயதாகிறது.
இந்நிலையில் தற்போது அதிதி ராவ் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான தகவல், அதாவது இவர் தனது 21 வயதிலே திருமணம் ஆகி பின்னர் விவாகரத்து பெற்றவர் என்றால் நம்ப முடியுமா? ஆம், அதிதி ராவ் சினிமா துறைக்கு வரும் முன்னரே திருமணம் செய்து கொண்டவர். ஆனால், தனக்கு திருமணமானதை முதலில் மறுத்த இவர் பின்னர் 2013 ஆம் ஆண்டு தனக்கு 21 வயது இருக்கும் போதே சத்ய தீப் மிஸ்ரா என்பவருடன் திருமணம் நடந்தது என்றும், பின்னர் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டோம் என்றும் கூறினார்.