மனதாலும் உடலாலும் உண்மையாகவே சுத்தமானவர்கள் அவர்கள்தான்: சூரி பாராட்டு

புதன், 1 ஏப்ரல் 2020 (18:04 IST)
கொரோனா வைரஸ் உச்சத்தில் இருக்கும் தமிழகத்தில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையிலும் தூய்மைப் பணியாளர்கள் தன்னலம் கருதாது தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தங்களது பணிகளை செய்து வருகின்றனர்
 
இந்த நிலையில் தூய்மைப் பணியாளர்களின் உழைப்பை தற்போதுதான் பொதுமக்கள் புரிந்து கொண்டு அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சூரி அவர்கள் சற்று முன் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கூறியுள்ளார் 
 
நம்முடைய வீட்டின் கழிப்பறையைப் கழுவுவதற்கே மூச்சு வாங்கி வருகிறது. ஆனால் நாம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஊரில் உள்ள சாக்கடைகளில் எல்லாம் இறங்கி வேலை செய்யும் ஒவ்வொருவருக்கும் கஷ்டம் எப்படி இருக்கும் என்பது எனக்கு இப்போதுதான் புரிகிறது. உண்மையாகவே நான் மனமார சொல்கிறேன், மனதாலும் உடலாலும் உண்மையாகவே சுத்தமானவர்கள் தூய்மை பணியாளர்கள் தான். அவர்கள் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்று தூய்மை பணியாளர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்
 
மேலும் அந்த வீடியோவில் இந்திய பிரதமர் சீனப் பிரதமருக்கு போன் செய்து இனிமேலாவது வவ்வால், பாம்பை சாப்பிடாமல் இருக்க அறிவுரை கூறுமாறு அவர் கேட்டுக்கொண்டார். மேலும் இந்த வீடியோவில் சூரி தனது மகனை அவர் குளிப்பாட்டுவது போன்றும், அவரது மகன் சேட்டை செய்வது போன்ற காட்சிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Corona day-8 #corona #lockdown #stayhome #staysafe #stayhealthy pic.twitter.com/Ld8DjlCXgb

— Actor Soori (@sooriofficial) April 1, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்