இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவோடு ஏற்பட்ட பிணக்கு காரணமாக தற்போது கோடம்பாக்கத்தில் புதிதாக தன் பெயரில் ஒரு ஸ்டுடியோவை வாங்கி அதில் இசையமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து தமிழ் சினிமா பிரபலங்கள் அந்த ஸ்டுடியோவுக்கு சென்று மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து வருகின்றனர்.