இந்நிலையில் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் விவேக்கிடம் தொகுப்பாளர் உங்களுக்கும் வடிவேலுவுக்கும் இடையில் சேர்ந்து நடிக்கும்போது ஏதாவது பிரச்சனை எழுந்துள்ளதா எனக் கேட்டபோது ‘இல்லை. ஏனென்றால் நான் நகரத்து படித்த இளைஞன் பார்வையில் நடிப்பேன். அவரோ கிராமத்து மனிதர் பார்வையில் நடிப்பார். இருவருக்குமான பாணி வேறு வேறு. ஒரு முறை மேடையில் அவர் பேசும்போது ‘நல்லா பேசறியா… நேத்து நைட்டே எழுதி வச்சுட்டியா?’ எனக் கேட்டேன். அதை மட்டும் அவர் தவறாக நினைத்துக்கொண்டார் என நினைக்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.