பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரோமோசனை முடித்துவிட்ட விக்ரம், நேற்று முதல் விக்ரம் தங்கலான் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக இருந்தது. இந்த நிலையில் நேற்றைய படப்பிடிப்புக்கு முன்னர் அவர் ரிகர்சல் செய்து கொண்டிருக்கும்போது திடீரென தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது