வைபவ்வின் 25 ஆவது படம் ரணம் டீசர் வெளியீடு..!

சனி, 5 ஆகஸ்ட் 2023 (07:31 IST)
சரோஜா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான வைபவ், தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கிய பல படங்களில் நடித்துவந்தார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் பபூன் திரைப்படம் ரிலீஸான நிலையில் இப்போது அவர் நடிப்பில் 25 ஆவது படமாக ரணம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோப் கதாநாயகிகளாக நடிக்க ஷெரீஃப் இயக்குகிறார். மது நாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு ஆரோல் கொரல்லி இசையமைக்கிறார். 

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. கிரைம் திரில்லர் பாணியில் இந்த படம் உருவாகி இருப்பது டீசரை பார்க்கையில் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்