நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்!

வியாழன், 19 ஜனவரி 2023 (09:54 IST)
தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து பெரு புகழ் பெற்று உச்சத்தை தொட்டவர் வைகைப்புயல் வடிவேலு. மதுரையை சொந்த ஊராக கொண்ட நடிகர் வடிவேலு ராஜ்கிரண் உதவியுடன் சினிமாவில் நுழைந்தார். 
 
டி.ராஜேந்திரன் இயக்கிய என் தங்கை கல்யாணி திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்பட உலகிற்கு அறிமுகமானார். அதன் பின் ராஜ்கிரண், தான் நடித்த என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் வடிவேலுவை பிரபலப்படுத்தினார். 
 
அவர் அவ்வளவு பெரிய உச்சத்தை அடைந்தும் அவரின் குடும்பத்தினர் தற்போது வரை மதுரையிலேயே தான் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா (87) மதுரை விரகனூரில் நேற்று இரவு உடல்நல குறைவால் காலமானார்
 
வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவாக இருந்து வந்த அவர் திடீரென நேற்று ( ஜனவரி 18 இரவு காலமானார். இதையடுத்து வடிவேலுவின் குடும்பத்திற்கு திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்