சூரரைப் போற்று இந்தி ரீமேக்… ரசிகர்களிடம் தலைப்புக் கேட்ட அக்‌ஷய் குமார்!

திங்கள், 25 ஏப்ரல் 2022 (15:11 IST)
சூரரைப் போற்று திரைப்படத்தின் இந்தி ரீமேக்கின் ஷூட்டிங் இன்று முதல் தொடங்கியுள்ளது.

சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. சூர்யா கேரக்டரில் அக்சயகுமார் நடிக்க இருப்பதாகவும் அபர்ணா பாலமுரளி கேரக்டரில் ராதிகா மதன் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பதாகவும் இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் இந்தி படம் இது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைக்கபோவது யார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழுக்கு இசையமைத்த ஜி வி பிரகாஷே இந்தி படத்துக்கும் இசையமைக்க உள்ளதை அறிவித்துள்ளார். கேங்ஸ் ஆஃப் வாசிபூர் படத்துக்குப் பின்னர் ஜி வி பிரகாஷ் இந்தி படத்துக்கு இசையமைக்க உள்ளார். 

இந்த படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இந்நிலையில் படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட படத்தின் ஹீரோ அக்‌ஷய் “பெயர் சூட்டப்படாமல் இந்த படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம். உங்கள் மனதில் ஏதேனும் நல்ல பெயர் இருந்தால் சொல்லுங்கள்” எனக் கேட்டுள்ளார்.


 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்