மலையாள சினிமா சமீபத்தில் கண்டெடுத்த நடிப்பு தங்கம், சன்னி வெய்ன். செகண்ட் ஷோ, நீலாகாசம் பச்ச கடல் சுவந்த பூமி படங்களில் சன்னி வெய்ன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஆனால், அவரது முத்திரைப் படம், அன்னாயும் ரசூலும்.
பகத் பாசில், ஆண்ட்ரியா நாயகன் நாயகியாக நடித்த இந்தப் படத்தில், படத்தின் கதையை வாய்ஸ் ஓவரில் சொல்கிறவர் சன்னி வெய்ன். பகத்தின் நண்பராக மிகமுக்கியமான வேடத்தை இந்தப் படத்தில் அவர் செய்திருப்பார். பகத்தைவிட பல நேரங்களில் சன்னி வெய்னின் நடிப்புதான் பார்வையாளர்களை கவரும், கவர்ந்தது.