பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தலைநகர் டெல்லியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களுக்கு நடிகர் சோனு சூட், மற்றும் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் விவசாய மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் பஞ்சாப், ஹரியானா பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தலைநகர் டெல்லியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டக்காரர்களை போலீஸார் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லிக்கு போராட்டக்காரர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் டெல்லி – ஹரியான தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் உள்ளே வர முடியாத படி எல்லைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் பஞ்சாப், ஹரியானா, டெல்லி ஆகிய பகுதிகள் பரபரப்புடன் காணப்படுகிறது.
அரியானா மாநில பாஜக அரசு மற்றும் மைய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள புதுதில்லி காவல்துறையின் விவசாயிகள் விரோதப் போக்கை #விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. மோடி அரசே, மக்கள் விரோத வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறு! எனப் பதிவிட்டுள்ளார்.