தனுஷ், வடசென்னை உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக இருப்பதால் அக்னி நட்சத்திரம் இந்தி வாய்ப்பை ஏற்க முடியாத நிலை. அதனால் அவருக்குப் பதில் கார்த்திக் வேடத்தில் நடிக்க, தமிழ், இந்தி இரு ரசிகர்களுக்கும் பரிட்சயமான நடிகராக பிஜோய் நம்பியார் தேடி வந்தார்.
கடைசியாக கிடைத்த தகவலின்படி அவர், நடிகர் சித்தார்த்தை தேர்வு செய்திருப்பதாக கேள்வி. தமிழ், இந்தி ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் சித்தார்த் என்பதால் அவரை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.