‘மெரினா’, ‘சூது கவ்வும்’, ‘நேரம்’, ‘டிமாண்டி காலனி’, ‘காக்கா முட்டை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ரமேஷ் திலக். அதுமட்டுமல்ல, சூரியன் எப்.எம்.மில் ஆர்.ஜே.வாகவும் பணியாற்றுகிறார்.
இவரும், ஆர்.ஜே. நவலட்சுமியும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கடந்த வருடம் அறிவித்தனர். அதன்படி, இருவருக்கும் பெசண்ட் நகர் ஆறுபடை வீடு முருகன் கோயிலில் நேற்று திருமணம் நடைபெற்றது.