நடிகர் விக்ரம் பிரபு நடித்த டாணாக்காரன் என்ற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி சில மாதங்கள் ஆகிறது என்பதும் இந்த படத்தின் டீஸர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டாணாக்காரன் திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த படம் ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாக உள்ளது. காவலர் பயிற்சிப் பள்ளியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். ஜெய் பீம் பட புகழ் நடிகர் தமிழ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலரை சில தினங்களுக்கு முன்னர் நடிகர் கார்த்தி டிவிட்டரில் வெளியிடவே அது ரசிகர்களைக் கவர்ந்தது.
இந்நிலையில் நாளை படம் ரிலீஸாக உள்ள நிலையில் நடிகர் ரமேஷ் திலக் இந்த படம் பற்றிய டிவீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் நல்லா நடிக்கத் தெரிஞ்சும் ரொம்ப நாளா கும்பல்ல நின்னுகிட்டு இருக்குற துனை நடிகர்களில் சிலர தூக்கி விட்டதுக்கே இந்த படமும் இந்த இயக்குனரும் வெற்றி அடையனும் அடைவார்கள்.ரொம்ப நல்ல படம் என கூறியுள்ளார்.