பஞ்சு அருணாசலம் மறைவு : ரஜினிகாந்த் இரங்கல்

புதன், 10 ஆகஸ்ட் 2016 (18:24 IST)
மறைந்த பிரபல சினிமா கதையாசிரியர் மற்றும் தயாரிப்பாளருமான பஞ்சு அருணாசலத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.


 

 
நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் ஏற்றவாறு கதை எழுதி பல வெற்றி பாடங்களை தந்தவர். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான புவனா ஒரு கேள்விக்குறி, பிரியா, முரட்டுக்காளை, கழுகு, போக்கிரி ராஜா, அடுத்த வாரிசு, ராஜாதி ராஜா, ராஜா சின்ன ரோஜா, பாயும் புலி உள்ளிட்ட எண்ணற்ற படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார்.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் இருவருக்கும் பல வெற்றிப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிய ஆசிரியர் பஞ்சு அருணாசலம். நகைச்சுவைப் படமாக இருந்தாலும், கிளாசிக் வகை திரைப்படமாக இருந்தாலும் திரைக்கதையில் தனி முத்திரைப் பதித்தவர் பஞ்சு அருணாசலம். 
 
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான புவனா ஒரு கேள்விக்குறி, பிரியா, முரட்டுக்காளை, கழுகு, போக்கிரி ராஜா, தர்மத்தின் தலைவன், மனிதன், தம்பிக்கு எந்த ஊரு, அடுத்த வாரிசு, ராஜாதி ராஜா, ராஜா சின்ன ரோஜா, பாயும் புலி உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார்.
 
அவர் உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் உயிரிழந்தார். அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்