'கில்லர் சூப்’ இயக்குநர் அபிஷேக் சௌபே பற்றி நடிகர் நாசர்!

J Durai

புதன், 17 ஜனவரி 2024 (10:24 IST)
சினிமா குறித்தான விரிவான பார்வை மற்றும் தனது அனுபவத்திற்காகக் கொண்டாடப்படுவர் நாசர். நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ‘கில்லர் சூப்’ படம் அவரது நடிப்புத் திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இதில் நடிகர்களின் நடிப்புத் திறன் மட்டுமல்லாது, இயக்குநர் அபிஷேக் செளபேயின் இயக்கத் திறமையும் இதில் அழகாக வெளியாகியுள்ளது.
 
நடிகர் நாசர் தனது சமீபத்திய படமான ‘கில்லர் சூப்’ இயக்குநர் அபிஷேக் செளபே குறித்துப் பேசியுள்ளார். நடிப்புத் துறையில் மிகவும் மதிப்பிற்குரிய நடிகரான நாசர், அவரது சினிமா வாழ்வில் இயக்குநர் அபிஷேக் சௌபேயுடன் பணிபுரிந்ததை மிக முக்கியமானதாகக் கருதுகிறார். இதுகுறித்து நாசர் கூறியது நான் இதுவரை 400க்கும் மேற்பட்ட இயக்குநர்களுடன் பணிபுரிந்திருக்கிறேன்.அதில் அபிஷேக் தனித்துவமானவர். இயக்குநர்- நடிகர் என்ற வழக்கமான உறவு முறையில் இருந்து அபிஷேக் முற்றிலும் மாறுபட்டவர். 
 
அவர் எப்போதும் ஒரு பாஸ் போல படப்பிடிப்புத் தளத்தில் நடந்து கொண்டது இல்லை. படக்குழுவினர் அனைவரும் இது எங்களது படம் எனக் கருதும் அளவுக்கு ஒவ்வொருவருடனும் தன்மையாகவும் அன்பாகவும் நடந்து கொண்ண்டார். இந்தப் பண்பு, சினிமாவில் மிக அரிதானது. இந்தப் பண்பு ஒரு வசதியான சூழ்நிலையை உருவாக்கி, கலைஞர்கள் தங்கள் படைப்பாற்றலை நம்பிக்கையுடன் வெளிக்கொண்டு வர வழிவகுக்கிறது” என்றார். 
 
அபிஷேக் செளபேயின் திறமையான இயக்கத்தில், நடிகர்களின் திறமையான நடிப்பில், க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த ‘கில்லர் சூப்’ நெட்ஃபிலிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்