பாரதிராஜாவின் பாசறையில் இருந்து வந்த மனோபாலா, 90 கள் வரை பல படங்களை இயக்கினார். அதில் ரஜினி நடித்த ஊர்க்காவலன் படமும் ஒன்று. அதன் பின்னர் கே எஸ் ரவிக்குமார் இயக்கிய நட்புக்காக படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் மிகப்பெரிய வெற்றி பெறவே, அதன் பின்னர் தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்து முன்னணி நடிகரானார்.