கொரோனாவிலிருந்து குணமடைந்தார் நடிகர் கருணாஸ்!

திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (13:47 IST)
சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனாவால் உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 4 வது கட்ட பொது ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் வரிசையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் திருவாடனை தொகுதி எம் எல் ஏ வுமான கருணாஸுக்கு தொற்று இருப்பது உறுதியாகி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாஸ் குணமடைந்து வீடு திரும்பினார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "மருத்துவர்கள்-செவிலியர்களுக்கு நன்றி" என கூறி பதிவிட்டுள்ளார்.

மருத்துவர்கள் - செவிலியர்கள் உள்ளிட்டோர்க்கு நன்றி. https://t.co/BzyXPiz8I9

— Karunaas (@karunaasethu) August 17, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்