ஆர்யாவை பின்பற்றும் நடிகர் தனுஷ்... ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட போட்டோ
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (21:19 IST)
நடிகர் ஆர்யா எப்போதும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் ஆர்வம் உடையவர். உடற்பயிற்சி, சைக்கிளிங் என அவ்வப்போது அவரது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றி ரசிகர்களின் பாராட்டுகளை பெறுவார்.
இந்நிலையில் இன்று அதே போல அவர் செய்த ஒரு செயல் கண்டனங்களைப் பெற்றுள்ளது. சென்னையில் தற்போது முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தனது பயிற்சியாளருடன் 2 மணிநேரத்துக்கும் மேலாக ஜாக்கிங் சென்ற புகைப்படத்தையும் தான் சென்ற பகுதிகளின் விவரங்களையும் சமூகவலைதளத்தில் பதிவேற்றி வருகிறார்.
இந்நிலையில், நடிகர் ஆர்யா போன்று நடிகர் தனுஷும் சைக்கிளிங் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். நடிகர் தனுஷின் மனைவியும் இய்க்குநருமான ஐஸ்வர்யா இதுகுறித்தௌ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்