நேற்று நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூடியது. இதில் பொதுச் செயலாலர் விஷால், துணைத் தலைவர் பொன்வண்ணன் தலைமையில் நடந்த இந்த செயற்குழுவில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராயநகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் 19 கிரவுண்ட் நிலத்தில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்று அறிவித்தனர்.
கட்டிட நிதி திரட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. நடிகர்கள் புதிய படங்களில் நடித்து சம்பள தொகையை கட்டிட நிதிக்கு வழங்குவதாகவும் அறிவித்தனர். ரூ.26 கோடி செலவில் 4 மாடிகளில் இந்த கட்டிடத்தை கட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 1,000 பேர் அமரும் அரங்கம், திருமண மண்டபம், பிரிவியூ தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடன பயிற்சி கூடம் மற்றும் அலுவலகங்கள் போன்றவையும் இங்கு கட்டப்பட உள்ளது.