என்னதான் பிரச்சனை பார்டர் படத்தில்.. ஐந்தாவது முறையாக ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!

புதன், 22 பிப்ரவரி 2023 (15:40 IST)
நடிகர் அருண் விஜய் நடித்த ‘பார்டர்’ என்ற திரைப்படம் ரிலீஸ் க்கு தயாராகிபல மாதங்கள் ஆகிய நிலையில் தற்போது அதிகாரபூர்வமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அருண் விஜய் நடிப்பில் ஈரம் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பார்டர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து கடந்து சில மாதங்களுக்கு முன்பே ரிலீஸ் ஆக இருந்த நிலையில் ரிலீஸ் செய்து தள்ளி போய்க்கொண்டே இருந்தது.  இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் பிப்வரி 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்திருந்தது.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுவது முதல் முறை இல்லை. இதற்கு முன்பே நான்கு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் தள்ளிவைக்கப் பட்டு வந்தது.   ஆனால் இப்போது மீண்டும் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஐந்து முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் படம் ரிலீஸாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் கதாநாயகன் அருண் விஜய்க்கும், தயாரிப்பாளருக்கும் இடையில் எழுந்த கருத்து மோதல் காரணமாக இந்த படத்தை அருண் விஜய் கண்டுகொள்வதே இல்லை என்றும் சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்