பிரபல நடிகர் ஆரியின் சொந்த ஊர் பழனி. அவரது பெற்றோர் அங்குதான் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஆரியின் தாயார் முத்துலட்சுமி இன்று அதிகாலை 3 மணியளவில் புதுக்கோட்டையில் காலமானார். அவரது உடல் சொந்த ஊரான பழனிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு, அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வு நாளை காலை பழனியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.