கடந்த 27 ஆண்டுகளுக்கு முன் வெளியான கன்னியாகுமரியில் ஒரு கவிதா எனும் திரைப்படம் சினிமா உலகுக்கு அறிமுகமானார் அனில் முரளி. தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்த அவர், ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவிலும் நடித்தார். கிட்டதட்ட 200 படங்களுக்கு மேல் அவர் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக அவர் நடித்த ஜீவி என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்நிலையில் கல்லீரல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட அவர், இன்று காலை இயற்கை எய்தியுள்ளார். அவருக்கு வயது 56. அவரின் மறைவு மலையாள திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு சக கலைஞர்கள் அஞ்சலில் செலுத்தி வருகின்றனர்.